தமிழாலய மாணவர்களுக்கான ஆண்டு இறுதி எழுத்துத் தேர்வு மற்றும் புலன்மொழித் தேர்வுகள் குறிப்பிட்ட அட்டவணையின்படி நடைபெறும். மாணவர்கள் தங்களது பாடப்பரப்புகளில் இருந்து கேட்கப்படும் கேள்விகளுக்குத் தயாராகுதல் வேண்டும்.
தமிழிலக்கணம், கட்டுரை வரைதல், வாசிப்புத் திறன் மற்றும் பொதுக் கேள்விகள் அடங்கிய எழுத்துத் தேர்வுகள் நடைபெறும்.
கேட்டல் , பேசுதல் மற்றும் வாசித்தல் போன்ற தேர்வுகள் அந்தந்த ஆசிரியர்களால் நடத்தப்படும்.
ஆண்டுதோறும் நடத்தப்படும் தமிழ்த்திறன் போட்டிகளில் பேச்சுப்போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், கட்டுரைப்போட்டி மற்றும் கவிதைப் போட்டிகள் நடைபெறும். இதன் மூலம் மாணவர்களின் மொழித் திறன் வளர்க்கப்படும்.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பயனர் பெயர் (Username) மற்றும் கடவுச்சொல் (Password) மூலம் 'உள்நுழைவு' (Login) பக்கத்திற்குச் சென்று தங்களுடைய தேர்வுப் பெறுபேறு மற்றும் தமிழ்த்திறன் போட்டிப் பெறுபேறுகளை அறிந்து கொள்ளலாம்.